News September 23, 2025

திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

image

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 23, 2025

துரைமுருகன் சொத்துக் குவிப்பு வழக்கு: இடைக்கால தடை

image

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை வேலூர் கோர்ட் விடுவித்திருந்தது. மேல்முறையீட்டில் வேலூர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சென்னை HC, வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து துரைமுருகன் தரப்பு SC-க்கு சென்ற நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

நவராத்திரியில் சொல்ல வேண்டிய அம்பாள் மந்திரம்!

image

இந்த மந்திரத்தை சொல்லுவதன் மூலம், 16 வகையான செல்வங்களையும் அம்பிகை அள்ளி கொடுப்பாள் என்பது ஐதீகம்.
‘யாதேவி ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’.
பொருள்:
‘எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்! இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News September 23, 2025

விலை மளமளவென குறைந்தது

image

GST வரி 18%ஆக குறைந்ததால் 350 CC மற்றும் அதற்கு கீழான பைக் விலை குறைந்துள்ளது. Activa 110 ₹7,874, Dio 110 ₹7,157, Activa 125 ₹8,259, Dio 125 ₹ 8,042, Shine 100 ₹5,672, Livo 110 ₹7,165, Honda SP 125 ₹8,447, CB125 Hornet ₹9,229, Unicorn ₹9,948, CB350 H’ness ₹18,598, CB350RS ₹18,857-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் Royal Enfield உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

error: Content is protected !!