News September 23, 2025
திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 23-09-2025 செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நெய்க்காரப்பட்டி 6 வது வார்டு, எஸ்.கே.எப். திருமண மண்டபம்,
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நகர்புற பஞ்சாயத்து ஏர்போர்ட் நகர் SS திருமண மண்டபம்,
நிலக்கோட்டை மைக்கேல் பாளையம் அன்னை மஹால்,
ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி ஆர்.சி.பாத்திமா மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர்
பழனியப்பா கல்யாண மண்டபம், காசிபாளையம் நடைபெறுகிறது.
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல்: சிறுமலை, 17 கொண்டை ஊசி வளைவு அருகே அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இறப்புக்கு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 23, 2025
திண்டுக்கல் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 23-09-2025 செவ்வாய்க்கிழமை, உங்களுடன் ஸ்டாலின் முகாம், வேடசந்தூர் பேரூராட்சி, பாலகிருஷ்ணாபுரம், நிலக்கோட்டை ஊராட்சி,ஒட்டன்சத்திரம் நகராட்சி, ரெட்டியார் சத்திரம், வேடசந்தூர் நகராட்சி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசு தேவைகளுக்கு மனு அளித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News September 22, 2025
பழனி திருக்கோயில் நிர்வாகம் மிரட்டுவதாக புகார்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானம், தங்களை அச்சுறுத்தி விரட்டுவதாக தம்புரான் தோட்டத்தில் வசிக்கும் மக்களும் கடை உரிமையாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.