News September 23, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

மதுரையில் உணவகங்களுக்கு பரிசுத்தொகை

image

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்களை பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் மற்றும் 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவது தொடர்பாக மதுரையில் உள்ள உணவகங்கள் வரும் அக்.15ம் தேதிக்குள் புதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News September 22, 2025

மதுரை ELCOT-ல் வேலை ரூ.1 லட்சம் சம்பளம்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்காட் ஐடி பூங்காவில் 100க்கு மேற்பட்ட டேட்டா ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 18 முதல் 25 வயது உள்ளவர்கள் UG.யில் B,Ed, B.A, B.com படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> அடுத்த மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 22, 2025

மதுரை: ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

image

மேலுார் அண்ணா காலனி மும்தாஜ் 56, கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று மும்தாஜ் மதுரை சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கிரில், மரக்கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன், வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தன. அவர் மேலுார் போலீசில் புகார் அளித்தார்.

error: Content is protected !!