News September 23, 2025

பொதுக் கணக்குக் குழுவில் எம்.எல்.ஏ சந்திரன்

image

தமிழ்நாடு பொதுக் கணக்குக் குழுவுக்கான (2024–2026) தலைவர் பொறுப்புக்கு கு. செல்வப் பெருந்தகை தேர்வு செய்யப்பட்டார். அவரின் தலைமையில், வளனூர் மேரினாதன், செல்வா சௌந்தரராஜன், திருத்தணி எம்.எல்.ஏ எஸ். சந்திரன் ஆகியோர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். சென்னை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Similar News

News September 23, 2025

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பொதுமக்கள் (ம) மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News September 23, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 22, 2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் இன்று ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

error: Content is protected !!