News September 22, 2025
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் இன்று ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Similar News
News September 23, 2025
திருவள்ளூர் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் போத்தனூர் – சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போத்தனூர்-சென்னை: செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 24 வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 மணிக்கும். சென்னை-போத்தனூர்: செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11.50 மணிக்கும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News September 23, 2025
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பொதுமக்கள் (ம) மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
News September 23, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.