News September 22, 2025

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

image

காந்தி பிறந்த நாளான அக்.2-ஆம் தேதி, டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபடுவார்கள் என, மாநில சிறப்பு தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மதுக்கடைகளை மூடி, மாற்று பணி வழங்கவும், காலி மது பாட்டில்களை திரும்ப பெற, டாஸ்மாக் பணியாளர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது

Similar News

News September 23, 2025

சென்னை: ரேஷன் கடைகளில் சில்லறை பிரச்னை இல்லை

image

தமிழக அரசின் நியாயவிலை கடைகளில், அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இனி வாங்கும் பொருட்களுக்கு, பணமாக கொடுக்க வேண்டாம். டிஜிட்டல் பரிமாற்றத்தை பயன் படுத்த “மொபைல் முத்தம்மா” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி சில்லரை தட்டுப்பாடு இருக்காது.

News September 23, 2025

சென்னையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா

image

சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி வரும் செப் 25 ம்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவேந்த் ரெட்டி கலந்து கொள்ள உள்ளார். இதில் அரசின் 7 திட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என நேற்று அமுதா ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

News September 22, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செ. 22 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!