News September 22, 2025

₹5,000 விலை குறைந்தது… HAPPY NEWS!

image

ஏசி மீதான GST 28%ல் இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளதால் முக்கியமான ஏசி பிராண்டுகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வோல்டாஸ் 1.5 டன் ஸ்பிளிட் பழைய விலை = ₹43,000 புது விலை = ₹39,600, எல்ஜி இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹52,000 புது விலை = ₹47,900, சாம்சங் ஸ்பிளிட் 1 டன் பழைய விலை = ₹35,000 புது விலை = ₹32,300, ப்ளூ ஸ்டார் இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹55,000 புது விலை = ₹50,700. வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.

Similar News

News September 23, 2025

குறட்டை விடுறீங்களா? இதய பிரச்னையா கூட இருக்கலாம்

image

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

News September 23, 2025

BREAKING: நள்ளிரவில் கிளம்பிய செங்கோட்டையன்

image

OPS, TTV ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை செய்த செங்கோட்டையன், நள்ளிரவு 12 மணியளவில் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். நீலகிரியில் இன்று நடக்கும் பரப்புரையில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கார் மூலம் கோபி, சத்தியமங்கலம் வழியாக இபிஎஸ் செல்கிறார். கோபி பஸ் ஸ்டாண்டில் காலை 7 மணிக்கு அவரை அதிமுகவினர் வரவேற்கின்றனர். இதை தவிர்க்கவே செங்கோட்டையன் சென்னைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது.

News September 23, 2025

மூட்டுவலியை விரட்டும் இந்த யோகாசனம் பண்ணுங்க!

image

மூட்டுவலி நீங்கவும், கால் தசைகள் வலுப்பெறவும் தினமும் வீராசனம் செய்து வாருங்கள் *முட்டி வரை காலை மடக்கி, கணுக்கால் தரையில் இருக்கும்படி அமரவும் *நெஞ்சுக்கு நேராக, கைகளை கூப்பி (படத்தில் உள்ளது போல) அமரவும் *இந்தநிலையில், மூச்சை மெதுவாக நன்கு இழுத்து, வெளியே விடவும் *இப்படி 1 முதல் 2 நிமிடங்கள் வரை செய்வதன் மூலம் உடல் நடுக்கம் நீங்கும். இத்தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!