News September 22, 2025

ஒரேயொரு CM மட்டுமே GST-ஐ எதிர்த்தார்: ஜெய்ராம் ரமேஷ்

image

2006 – 2014 வரை ஒரேயொரு CM மட்டும் GST-ஐ எதிர்த்தார், அவரே பிறகு பிரதமராகி GST-யின் பாதுகாவலராக உருவெடுத்தார் என்று PM மோடியை காங்.,ன் ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டி-யில் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறைவாகவே உள்ளது என்ற அவர், சிறு குறு தொழில் துறையின் நடைமுறை சிக்கல்களை எளிதாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சீர்திருத்தம் தாமதமானது என்றும் சாடினார்.

Similar News

News September 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

News September 23, 2025

ஓய்வின்றி உழைக்கும் PM மோடி: அமித் ஷா

image

கடந்த 24 ஆண்டுகளில் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இடைவிடாத உழைப்பு பிரதமரின் முடிவுகளையும், பணியின் வேகத்தையும் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மோடியின் தலைமையில், 2047க்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

US அமைச்சருடன் ஜெய்சங்கர் நடத்திய முக்கிய சந்திப்பு

image

50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு உள்ளிட்டவைக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். ஐநா கூட்டத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசித்ததாக ஜெய்சங்கர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நிச்சயம் என 50% வரி, விசா கட்டணம் குறித்தும் பேசப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!