News September 22, 2025

குழந்தைகளுக்கு கண் மை போடுறீங்களா? அபாயம்!

image

கண் திருஷ்டிக்காக குழந்தைகளின் கண்களுக்கு சிலர் மை இட்டுவிடுவர். ஆனால் இப்படி செய்வது குழந்தைகளின் கண்களை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில கண் மைகளில் இருக்கும் ஈயம் (Lead) நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் என்கின்றனர். அதோடு, குழந்தைகளின் கண்கள் மென்மையானவை என்பதால் அவர்களுக்கு நோய்தோற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர். அனைத்து பெற்றோர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.

Similar News

News September 23, 2025

ஓய்வின்றி உழைக்கும் PM மோடி: அமித் ஷா

image

கடந்த 24 ஆண்டுகளில் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இடைவிடாத உழைப்பு பிரதமரின் முடிவுகளையும், பணியின் வேகத்தையும் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மோடியின் தலைமையில், 2047க்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

US அமைச்சருடன் ஜெய்சங்கர் நடத்திய முக்கிய சந்திப்பு

image

50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு உள்ளிட்டவைக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். ஐநா கூட்டத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசித்ததாக ஜெய்சங்கர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நிச்சயம் என 50% வரி, விசா கட்டணம் குறித்தும் பேசப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

News September 23, 2025

ஹீரோயின் அம்சம் என்னிடம் இல்லையாம்: ஸ்வாசிகா

image

மூத்த நடிகர் ஒருவர் கதாநாயகிக்கு தேவையான அம்சம் என்னிடம் இல்லை என்றும், முகப்பருக்கள் இருப்பதாகவும் கூறியதாக ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இதே முகப்பருக்கள், வறண்ட சருமம், இதே மூக்குடன் தான் நடித்தேன் என்றும் கூறியுள்ளார். ‘லப்பர் பந்து’ படம் மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

error: Content is protected !!