News September 22, 2025
நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்… இறுதி அஞ்சலி

மறைந்த MR ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கண்ணீர் மல்க தனது தாயாரை, சகோதரிகள் ராதிகா மற்றும் நிரோஷா உள்பட உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, CM ஸ்டாலின், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கீதா ராதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News September 22, 2025
ராசி பலன்கள் (23.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
பள்ளிகளில் PM மோடியின் படம் திரையிடல்: காங்கிரஸ் எதிர்ப்பு

PM-ன் சிறுவயது பருவத்தை பிரதிபலிக்கும் ‘chalo jeete hain’ படத்தை பள்ளிகளில் திரையிடுவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. Azadi ka Amrit Mahotsav கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அப்படம் காட்டப்படும் நிலையில், வகுப்பறையை பிரச்சார தியேட்டராக BJP மாற்றுவதாகவும், வலுக்கட்டாயமாக மாணவர்களுக்கு படத்தை காட்டுவதாகவும் கூறியுள்ளது. கல்விக் கொள்கையை BJP அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் காங். சாடியுள்ளது.
News September 22, 2025
நயினார் நாகேந்திரன் – JP நட்டா சந்திப்பு

டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், JP நட்டாவை சந்தித்துள்ளார். அக்டோபரில் நயினார் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைகள், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லி சென்ற EPS, அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதேநேரம், TTV தினகரன், OPS ஆகியோரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.