News September 22, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

செப்டம்பர் மாதத்திற்கான திருவாரூர், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25.09.2025-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

பழங்குடியின மக்களுடன் உரையாடிய அமைச்சர் T.R.B.ராஜா

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, பாமணி கிராமத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சரும் மன்னார்குடி எம்எல்ஏ-வுமான T.R.B.ராஜாவை சந்தித்து நேற்று (செப்.22) உரையாடினர்.

News September 22, 2025

திருவாரூர் மக்களே உஷார்..வெளுக்க போகும் மழை

image

திருவாரூர் மக்களே இன்று (செப்.22) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!

News September 22, 2025

திருவாரூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8-20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா திருவாரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் 04366-251121 என்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!