News September 22, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.
Similar News
News September 22, 2025
இந்த நாடுகள்தான் பெஸ்ட்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான உணவுகள் கிடைக்கும். அதில், சில நாடுகளின் உணவுகள் சுவை மிக்கவையாக உள்ளன. அந்த வகையில், உலகில் சுவையான உணவு கிடைக்கும் நாடுகள் எது என்று மேலே கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் நாடுகள் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கான புதிய அப்டேட் இது: www.ungaludanstalin.tn.gov.in இணையதளத்திற்கு சென்று Track Grievance-ஐ கிளிக் செய்யவும். புதிய பயனர் என்றால் New User? Signup பகுதியில் பெயர், செல்போன் எண் பதிவிட்டு ID-யை உருவாக்கவும். ஏற்கெனவே பதிவு செய்தவர் எனில், உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைந்து, தங்களது விண்ணப்ப நிலையை அறியலாம். SHARE பண்ணுங்க.
News September 22, 2025
பாக்., வீரரின் மனைவிக்கு பாடம் புகட்டிய இந்திய ரசிகர்கள்

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக பாக்., கூறுவதை, ‘6- 0’ என்ற சைகைகளால் வெளிப்படுத்தினார் பவுலர் ஹாரிஸ் ராஃப். இந்நிலையில், ‘நாங்கள் விளையாட்டில் தோல்வியுற்றோம், ஆனால் போரில் வென்றோம்’ என அவரது மனைவி முஜ்னா மசூத் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், விளையாட்டு, போர் என எதிலும் இந்தியாவே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.