News September 22, 2025
விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.
Similar News
News September 22, 2025
தமிழ்நாட்டின் பெருமைகள்

தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இவை நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை என்ன இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், யுனெஸ்கோ அங்கீகாரம் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் தளங்களை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

<<17708234>>தசரா<<>>, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்.23-அக்.23 வரை சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்படும். அதேபோல், செப்.28-அக்.26 வரை தாம்பரம்- நாகர்கோவில் இடையேயும், செப்.25-அக்.23 வரை சென்னை- கோவை போத்தனூர், <<17761102>>வேறு மார்க்கங்களிலும்<<>> சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
கம்பேக் கொடுக்கும் குயின்டன் டி காக்

தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20, ODI தொடருக்கான அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2027-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெறும் காரணத்தால், குயின்டன் டி காக் ஓய்வு முடிவை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதே போல இந்திய வீரர்கள் யாரெல்லாம் கம்பேக் கொடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?