News September 22, 2025

சேலம்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

சேலம் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 22, 2025

BREAKING சேலம் விஜய் பிரச்சாரத்தில் புதிய ட்விஸ்ட்!

image

தவெக தலைவர் விஜய் திடீர் மாற்றமாக சேலத்துக்கு பதிலாக வருகின்ற சனிக்கிழமை கரூரில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் சேலத்தில் திட்டமிட்டப்படி டிசம்பர் 12,13 ஆம் தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவார் என தவெக சேலம் மத்திய மாவட்ட செயாளார் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பிரச்சாரம் நடைபெறும் இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 22, 2025

சேலம்: ரூ.3 லட்சம் அறிவித்தார் CM ஸ்டாலின்!

image

சேலம் , அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் (செப்.20) குட்டையில் குளித்த போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நிஷாந்த்(23), மற்றும் பிரசாந்த்(19), நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.

News September 22, 2025

சேலம்: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (செப்.22) 2024-2025 கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!