News September 22, 2025
புதுச்சேரி: உரிமம் இன்றி நாய்கள் வளர்த்தால் அபராதம்!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் நாய்கள் வெறி பிடிக்காமல் இருக்க வெறி நாய்கடி (ரேபிஸ்) தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணிகள், அடுத்த மாதம் முதல் நகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் வீடுகளில் நாய்களை வளர்ப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News September 23, 2025
ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கு புதுவை நபர் தேர்வு

புதுவையை சேர்ந்த ஜூனியர் ஆண்கள் தனிநபர் பங்கேற்பாளரான ரோஷன்,
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் செப்டம்பர் 30ந்தேதி வரை நடைபெறும் 4வது ஐ.சி.சி.. ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வு செய்யபட்டுள்ளார். அவருக்கு பாண்டிச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் பொதுச்செயலாளர் பாசித் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
News September 22, 2025
வி.ஏ.ஓ. தேர்வுக்கான பதில்கள் வெளியீடு

புதுவை வருவாய்த்துறை சார்பில் 41 வி.ஏ.ஓ. பணிக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான பதில்கள் அரசு ஆட்சேர்ப்பு இணையதளத்தில் இன்று (செப்.22) வெளியிடப்பட்டுள்ளது. செயல்முறை முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் அதே இணையதளத்தில் வெளியிடப்படும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News September 22, 2025
புதுச்சேரியில் தேர்வாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

புதுச்சேரியில் சுகாதாரத்துறை பணி தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளது. மருந்தாளுநருக்கு செப்டம்பர் 24ல், இசிஜி வல்லுநர்களுக்கு செப்டம்பர் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளருக்கு செப்டம்பர் 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மகப்பேறு சிகிச்சை உதவியாளர்களுக்கு செப்டம்பர் 30ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.