News September 22, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (23.9.2025) செவ்வாய்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Similar News
News September 22, 2025
தென்காசி: ஜக்கம்மா மாதிரி; இனி மொபைல் முத்தம்மா!

தென்காசி மக்களே இனி ரேஷன் கடைகளில் நியாய விலை பொருட்கள் வாங்க கட்டபையும் காசூம் கொண்டு போகும் காலம் போயே போச்சு.தமிழக அரசு புதிதாக ”மொபைல் முத்தம்மா ” சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் உங்க ரேஷன் கடைகளில் UPI- ஐ மூலம் பணம் செலுத்தி நியாய விலை பொருட்களை வாங்கலாம். நீங்க ரேஷன் கடைக்கும் கட்டை பையும் போனும் கொண்டு போற காலம் வந்தாச்சு. உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
தென்காசி: பேருந்து நிறுத்தங்களில் போதை ஆசாமிகள்

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் பல பேர் பேருந்து நிலையங்களில் ஏராளமான மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு பேருந்து நிழற்குடையில் மது போதையில் படுத்து கிடப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 22, 2025
தென்காசி: கிராம வங்கியில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <