News September 22, 2025
BREAKING: ஆவின் பொருள்கள் விலை குறைந்தது

ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததை அடுத்து ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நெய், பனீர் ஆகியவற்றின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நெய் ₹40 குறைந்து ₹650-க்கு விற்கப்படும். ₹300-க்கு விற்கப்பட்ட அரை கிலோ பனீர் இனி ₹275-க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 கிராம் பனீர் விலையும் ₹110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
மோடி கடைக்கு போய் பொருள் வாங்கட்டும்: மனோ தங்கராஜ்

PM மோடி கோட் சூட்டை கழட்டிவிட்டு கடையில் சென்று பொருள்கள் வாங்க வேண்டும், அப்போது தான் விலைவாசி குறித்து தெரிய வரும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கிவிட்டு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். நாங்கள் செய்வது மக்கள் அரசியல், அவர்கள் செய்வது கார்ப்ரேட் அரசியல் என சாடியுள்ளார்.
News September 22, 2025
மூளை நன்றாக செயல்பட

மூளை நன்றாக செயல்படுவதால் நினைவாற்றல், கவனம், முடிவுகள் எடுப்பது ஆகியவை மேம்படுகின்றன. சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்க முடியும். இதனால் மனநலன் கூடும். இதற்கு என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த செயல்பாட்டை செய்யுங்கள். மேலும், உங்களுக்கு தெரிந்த வேறு ஏதேனும் செயல்பாடு இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
அன்புமணி கைப்பாவையாக செயல்படுகிறார்: MLA அருள்

அன்புமணி, அவரது தந்தையை சந்திக்க வேண்டும், அவர் பேச்சை கேட்பதாக கூற வேண்டும் என்று MLA அருள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்தாலே, அவர் எதிர்பார்த்ததும், எதிர்பாராததும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்புமணி கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இயக்குபவரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ராமதாஸை இயக்க யாரும் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.