News September 22, 2025

விருதுநகர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 23, 2025

விருதுநகரில் பெண்களுக்கு வேலை., ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் செப்.30 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

விருதுநகர்: மழை நெருங்குது! மக்களுக்கு அறிவுரை

image

விருதுநகரில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 23, 2025

சிவகாசியில் தடையை மீறி தொடரும் பட்டாசு விற்பனை

image

சிவகாசியில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை, விளம்பரத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்து மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் இந்த உத்தரவை மீறி ஏராளமான பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!