News September 22, 2025

திருப்பத்தூரில் ஓர் அஜந்தா!

image

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 22, 2025

மாவட்ட அளவில் சாதனை படைத்த திருப்பத்தூர் மாணவி

image

வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி கல்லூரியில் நேற்று மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அமுத ஜீவன் மகள் கனிஷ்கா முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

News September 22, 2025

திருப்பத்தூர்: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

திருப்பத்தூர் பெண்களுக்கான பாதுகாப்பு எண்கள்!

image

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியே. எனவே, பெண்கள் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம் -01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 ஆகிய எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

error: Content is protected !!