News September 22, 2025
அரியலூர்: தேவார நாயன்மார்கள் வழிபட்ட கோயில் தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடியின் வரலாறு, சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. இவ்விடம் சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது. இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமாகும்.
Similar News
News September 22, 2025
அரியலூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

அரியலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8 – 20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா அரியலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புகாரளியுங்கள். இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
அரியலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க
News September 22, 2025
அரியலூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.23) அரியலூர், நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களைக் கொடுத்து, அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.