News September 22, 2025
கோவை: வெறிநாய் தொல்லையா..? உடனே CALL!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News September 22, 2025
கோவை: விபத்தில் துடிதுடித்து பலி!

கோவை: காரமடை அடுத்துள்ள பிளிச்சி தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(22). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றிரவு(செப்.21) பெட்டதாபுரம் அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர அவரை மீட்டு மேட்டுப்பாளையம் ஜி.எச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 22, 2025
கோவை மாணவர்களுக்கு கல்விக் கடன்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன் குமார் வழங்கினாா். பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் இருந்தனர்.
News September 22, 2025
கோவை – பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று(செப்.21) விடுத்த செய்தி குறிப்பில், ’கேஎஸ்ஆா் பெங்களூரு – கோவை இடையிலான டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 22 ஆம் தேதி முதல் காா் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் கோவை – கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 23 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.