News September 22, 2025
மதுரை ELCOT-ல் வேலை ரூ.1 லட்சம் சம்பளம்

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்காட் ஐடி பூங்காவில் 100க்கு மேற்பட்ட டேட்டா ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 18 முதல் 25 வயது உள்ளவர்கள் UG.யில் B,Ed, B.A, B.com படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News September 22, 2025
மதுரை: ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

மேலுார் அண்ணா காலனி மும்தாஜ் 56, கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று மும்தாஜ் மதுரை சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கிரில், மரக்கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன், வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தன. அவர் மேலுார் போலீசில் புகார் அளித்தார்.
News September 22, 2025
இன்று மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி

மதுரை, விருதுநகர் மாவட்ட கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி இன்று (செப்.22) இரவு விமானத்தில் மதுரை வருகிறார்.அங்கிருந்து விருதுநகர் செல்லும் அவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை (செப்.,23) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மதுரை திரும்புகிறார். செப்.,24ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
News September 22, 2025
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே<