News April 13, 2024

IPL வரலாற்றில் புதிய சாதனை

image

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் மற்றும் 11 பந்துகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு எதிராக 160+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை டெல்லி அணி பெற்றுள்ளது.

Similar News

News February 10, 2026

மகன் திருமணம்.. மோடியை சந்தித்த சச்சின்

image

சச்சின் தனது மகனின் திருமணத்திற்கு PM மோடியை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜுன் – சானியா திருமணம் மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக PM-ஐ அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சந்திப்பு போட்டோக்களை X தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், திருமண ஜோடியை ஆசீர்வதித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியதற்கு PM-க்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 10, 2026

நடிகை பத்மா காலமானார்.. உருக்கமான PHOTOS

image

சின்னத்திரை ரசிகர்களை தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய <<19060131>>நடிகை பத்மா(48)<<>>, இந்த பூவுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். இறுதி காலத்தில் புற்றுநோய்க்கு எதிராக போராடிய அவர், சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் வாடியது பெரும் சோகம். பத்மாவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ரசிகர்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். கடைசி போட்டோ உங்களை அழ வைக்கலாம்!

News February 10, 2026

கடும் வேதனையில் காங். தொண்டர்கள்: சோடங்கர்

image

CM ஸ்டாலினை சந்தித்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். காங்., எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்த தயாராக இருப்பதாகவும், துரதிர்ஷ்டவசமாக இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததால் தொண்டர்களும், தலைவர்களும் கடும் வேதனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!