News September 22, 2025
வந்தாச்சு ‘சென்னை ஒன்’.. இனிமே டிக்கெட் எடுப்பது ஈசி!

ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தும் <<17789688>>’சென்னை ஒன்’<<>> செல்போன் APP-ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் APP உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணத் திட்டமிடலுக்கு ஏற்ப QR CODE டிக்கெட்டை பெற்று அனைத்து பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.
Similar News
News September 22, 2025
உ.பி.,யில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை

அலகாபாத் HC-ன் உத்தரவை அடுத்து, FIR, அரஸ்ட் வாரண்ட் உள்பட போலீஸ் ஆவணங்களில் சாதிப் பெயரை பயன்படுத்த கூடாது என்று உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ் பலகை, வாகனங்களிலும் சாதிய அடையாளங்களுடன் கூடிய வாசகங்களை உடனடியாக அழிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சாதி பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
News September 22, 2025
அண்ணாமலை – டிடிவி சந்திப்பு: மீண்டும் கூட்டணியா?

NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி-ஐ அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து டிடிவி விலகிய நிலையில், தமிழக நலனுக்காக அவரை சந்திப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் சந்தித்து 1:30 மணி நேரம் ஆலோசித்ததாகவும், அப்போது டிடிவி-ஐ மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News September 22, 2025
₹31,000 சம்பளம்.. மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள 160 டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இப்பணிக்கு B.E., B.Tech., படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: ₹25,000 – ₹31,000. இதற்கு இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், உடனடியாக இங்கே <