News September 22, 2025
ரேஷன் பொருள்கள் வீடு தேடி வர இதை பண்ணுங்க!

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வீட்டுக்கே கொண்டு சென்று வழங்கும் தாயுமானவர் திட்டத்தை அண்மையில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தில் இணையும் புதிய பயனாளிகள், மாதாந்தர ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, ரேஷன் ஊழியர்கள் பொருள்களை வீடுகளில் வழங்குவார்கள். SHARE IT.
Similar News
News September 22, 2025
சாகச பயணம் செய்ய ஆசையா?

சாகச சுற்றுலா செல்ல விரும்புவோரின் பயணத்தை சிறப்பாக மாற்றுவதே அவர்கள் செல்லும் பாதைதான். அதிலும் குறிப்பாக வளைந்து நெளிந்து செல்லும் zig zag சாலை பயணம், சுற்றுலாவின் த்ரில்லை அதிகப்படுத்தும். இந்த zig zag சாலை எங்கெல்லாம் உள்ளது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க பயணிக்க விரும்பும் சாலை எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
இலவச கேஸ் சிலிண்டர்கள்: மத்திய அரசு அறிவிப்பு

நவராத்திரி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PMUY <<7491642>>உஜ்வாலா<<>> திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இத்துடன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 10.60 கோடியாக உயரும். இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு இது சான்று’ என அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.
News September 22, 2025
OG பட டிக்கெட்டை ₹1.29 லட்சத்துக்கு வாங்கிய ரசிகர்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘OG’ படம், செப்.25-ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதற்கான FDFS டிக்கெட்டை ரசிகர் ஒருவர் ₹1,29,999-க்கு வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் செளட்டுப்பலில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 1 மணி ஷோக்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனையே அமுதலா பரமேஷ் என்ற ரசிகர் ₹1.29 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.