News September 22, 2025
ராம்நாடு: டாஸ்மாக் கடையில் லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப் 21) ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடைக்குள் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 22, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 22, 2025
ராம்நாடு: 53 கிணறுகள் காணவில்லை

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 1998ம் ஆண்டில் இருந்த அரசுக்கு சொந்தமான 95 கிணறுகளில் தற்போது களப்பணியாளர்களின் அறிக்கையின்படி 42 கிணறுகள் மட்டுமே உள்ளன. 53 கிணறுகளை காணவில்லை. 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலர்களின் கணக்கெடுப்பின்படி 42 கிணறுகளாக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் 53 கிணறுகள் காணவில்லை. தொடர் பராமரிப்பு இல்லாமல் மேலும் கிணறுகள் குறைய வாய்ப்புள்ளது.
News September 22, 2025
ராமநாதபுரத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி

ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சி தொடர்பான மற்ற விபரங்களை 88254 11649, 95781 63661. ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.