News April 13, 2024
நாட்டில் பிளவை ஏற்படுத்தவே சாதிவாரி கணக்கெடுப்பு

நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது அல்ல என்றும், ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது மக்களிடையே பிளவை ஏற்படுத்தத்தான் என்றும் விமர்சித்தார்.
Similar News
News February 9, 2026
விருத்தாச்சலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா?

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூரில் நடந்த IJK மாநில மாநாட்டில் நிறைவேறிய 11 தீர்மானங்களில் ஒன்றாக விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கையும் வாசிக்கப்பட்டது. அதனை மாநாட்டில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனும் வலியுறுத்தியுள்ளார். இதனால் வரும் தேர்தலில் விருத்தாச்சலம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 9, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,840 உயர்வு

இந்த வார தொடக்கம் முதலே தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹230 உயர்ந்து ₹14,650-க்கும், 1 சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை உயரும் என கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News February 9, 2026
இந்தியாவுடன் விளையாட PAK போட்ட 3 கண்டிஷன்கள்!

இந்தியாவுடன் T20I WC-ல் விளையாட PAK, ICC-யிடம் 3 கண்டிஷன்களை வைத்துள்ளதாம் *ICC வருவாயில் அதிக பங்கு வேண்டும் *2 அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டி மீண்டும் நடத்தப்படணும் *போட்டிகளில் கை குலுக்கும் (Handshake) நடைமுறையை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். வரும் 15-ம் தேதி IND vs PAK போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ICC இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொள்ளுமா?


