News September 22, 2025
திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல்: வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. பயிர் வளர்ச்சிக்கான தேவையை கருத்தில் கொண்டு ஒரே பயிர் நிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020- ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசானம் (50) என்பவரை பழனி அழகாபுரியை சேர்ந்த கருப்பசாமி மகன் பழனிசாமி (35) என்பவர் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பு.
News September 22, 2025
திண்டுக்கல்: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.
News September 22, 2025
திண்டுக்கல்: விவசாயி துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனி(60) எனும் விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது துவரங்குறிச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வேகமாக ஓட்டி வந்த பைக் பழனி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.