News September 22, 2025
திண்டுக்கல்: இனி வரி கட்ட அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.
News September 22, 2025
திண்டுக்கல்: விவசாயி துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனி(60) எனும் விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது துவரங்குறிச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வேகமாக ஓட்டி வந்த பைக் பழனி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
News September 22, 2025
திண்டுக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!