News September 22, 2025

திருச்சி: கிராம வங்கியில் வேலை; ரூ.80,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>https://www.ibps.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News September 23, 2025

அமைச்சர் மாவட்டத்தில் இப்படியா?: அண்ணாமலை அறிக்கை

image

துறையூர், சிங்களாந்தபுரத்தில் இன்று பள்ளியின் மேற்கூரை கட்டடம் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக பள்ளி துவங்கும் முன்பு இந்த அசம்பாவிதம் நடந்ததால், குழந்தைகள் உயிர் தப்பினர். அமைச்சர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் உரிய விளக்கம் தர வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அவரது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 23, 2025

திருச்சி: தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடக்கம்

image

இந்திய அரசின் ஸ்கில் இந்தியா, என்.எஸ்.டி.சி சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, திருச்சி மேலப்புலி வார்டு ரோட்டில் உள்ள சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில் இன்று (செப்.22) தொடங்கி அக்.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு 94473 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

திருச்சி மக்களே உள்ளூரில் அரசு வேலை

image

திருச்சி மக்களே..! IIM Trichy-யில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅நிறுவனம்: Indian Institute of Management Tiruchirappalli
✅பணி: பல்வேறு
✅கல்வி தகுதி: டிகிரி மற்றும் பணிக்கேற்ப
✅சம்பளம்: ரூ.25,500 –ரூ.1,42,400
✅மேலும் விவரங்களுக்கு: <>Click Here<<>>
✅கடைசி தேதி: 21.10.2025
✅ வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!