News September 22, 2025
குற்றாலம் பராசக்தி பீடத்தில் நவராத்திரி விழா தேதி!

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திருகுற்றாலநாதர் கோயிலில் வரும் செப்டம்பர்.23ம் தேதி நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாலை 4மணிக்கு மேல் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா துவங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் அபிஷேகம் இரவு 8 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பராசக்தி பீடத்தில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
Similar News
News September 22, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (23.9.2025) செவ்வாய்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News September 22, 2025
தென்காசி: ஜக்கம்மா மாதிரி; இனி மொபைல் முத்தம்மா!

தென்காசி மக்களே இனி ரேஷன் கடைகளில் நியாய விலை பொருட்கள் வாங்க கட்டபையும் காசூம் கொண்டு போகும் காலம் போயே போச்சு.தமிழக அரசு புதிதாக ”மொபைல் முத்தம்மா ” சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் உங்க ரேஷன் கடைகளில் UPI- ஐ மூலம் பணம் செலுத்தி நியாய விலை பொருட்களை வாங்கலாம். நீங்க ரேஷன் கடைக்கும் கட்டை பையும் போனும் கொண்டு போற காலம் வந்தாச்சு. உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
தென்காசி: பேருந்து நிறுத்தங்களில் போதை ஆசாமிகள்

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் பல பேர் பேருந்து நிலையங்களில் ஏராளமான மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு பேருந்து நிழற்குடையில் மது போதையில் படுத்து கிடப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.