News September 22, 2025

கோவை: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

image

கோவை மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

Similar News

News September 22, 2025

கோவை: விபத்தில் துடிதுடித்து பலி!

image

கோவை: காரமடை அடுத்துள்ள பிளிச்சி தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(22). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றிரவு(செப்.21) பெட்டதாபுரம் அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர அவரை மீட்டு மேட்டுப்பாளையம் ஜி.எச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 22, 2025

கோவை மாணவர்களுக்கு கல்விக் கடன்

image

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன் குமார் வழங்கினாா். பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் இருந்தனர்.

News September 22, 2025

கோவை – பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று(செப்.21) விடுத்த செய்தி குறிப்பில், ’கேஎஸ்ஆா் பெங்களூரு – கோவை இடையிலான டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 22 ஆம் தேதி முதல் காா் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் கோவை – கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 23 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!