News September 22, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடரும்..!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 22, 2025
செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.
News September 22, 2025
செங்கல்பட்டு: நள்ளிரவில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 22, 2025
செங்கல்பட்டில் மிஸ் பண்ணக்கூடாத 8 கோயில்கள்!

1.கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
2.ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
3.வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
4.ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
5.சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
6.கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
7.ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
8.காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்