News September 22, 2025
திண்டுக்கல் மாவட்ட போலீசார் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினமும் விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், “வங்கியிலிருந்து பேசுவதாகக் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: கிராம வங்கி வேலைக்கு உடனே APPLY!

திண்டுக்கல் மக்களே.., இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 22, 2025
திண்டுக்கல்: இனி வரி கட்ட அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
திண்டுக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)