News September 22, 2025
குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு ஏன் கொடுக்க கூடாது?

குழந்தைகளுக்கு முதல் ஒரு வயதில் சர்க்கரை, உப்பு கொடுத்ததால் அவர்களுக்கு அது பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுமாம். குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் முதல் 12 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையாது என்பதால், உப்பு(சோடியம்) பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். இதனால் சத்தான உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். தாய்மார்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 22, 2025
இனி ₹14 மட்டுமே.. இன்று முதல் விலை குறைந்தது

அனைத்து ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் ரயில் நீர் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ₹1 குறைந்து இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. GST வரி குறைப்பின் பலனை ரயில் பயணிகள் பெறும் வகையில் பேக்கேஜ் செய்யப்பட்ட ரயில் நீர், ஒரு லிட்டர் ₹15-லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் ₹10-லிருந்து ₹9-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விலை குறைப்பு விவரங்களை பயணிகளுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 22, 2025
‘லோகா’ பட ஓடிடி ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி

அதிக வசூலை ஈட்டிய மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ள ‘லோகா’, விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் துல்கர் சல்மான் மறுத்துள்ளார். ‘லோகா’ பட ஓடிடி வெளியீடு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்த அவர், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களுக்கு ‘லோகா’ படம் பிடிச்சிருந்ததா?
News September 22, 2025
பக்தி பாடல்களை தனக்கு SHARE செய்ய சொல்லும் PM

நவராத்திரி என்பது தூய பக்தியை குறிக்கும் பண்டிகை என PM மோடி பதிவிட்டுள்ளார். இந்த பக்தியை பலர் இசையின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறிய அவர், பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், தாங்கள் பாடிய பக்தி பாடல்களையோ அல்லது தங்களுக்கு பிடித்த பக்தி பாடல்களையோ தனக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார். வரும் நாட்களில் அதில் சிலவற்றை அவர் பதிவிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.