News September 22, 2025
நாய், பூனை சண்டையால் பிரியும் தம்பதி

போபால் குடும்ப கோர்ட்டில் விநோதமான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. கணவர் வளர்க்கும் நாயும், மனைவி வளர்க்கும் பூனையும் எப்போதுமே சண்டையிட்டு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால், தங்களுக்குள் விவகாரத்து பெறுவதே தீர்வு என அந்த தம்பதி கோர்ட்க்கு சென்றுள்ளது. 2024-ல் திருமணம் செய்த தம்பதி செல்லப் பிராணிகளால் பிரிவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News September 22, 2025
குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு ஏன் கொடுக்க கூடாது?

குழந்தைகளுக்கு முதல் ஒரு வயதில் சர்க்கரை, உப்பு கொடுத்ததால் அவர்களுக்கு அது பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுமாம். குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் முதல் 12 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையாது என்பதால், உப்பு(சோடியம்) பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். இதனால் சத்தான உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். தாய்மார்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 22, 2025
விஜய் மீதான நம்பகத்தன்மை குறையும்: துரை வைகோ

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் விமர்சித்தது ஏற்புடையதல்ல என துரை வைகோ தெரிவித்துள்ளார். பொத்தாம் பொதுவாக அனைவர் மீதும் குற்றச்சாட்டு வைப்பது சரி அல்ல என கூறிய அவர், அது விஜய் மீதான நம்பகத்தன்மையை மக்களிடம் குறைக்கும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து விரிவான அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
News September 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு.
*ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிபுக்கான திறவுகோலாகும்.
*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது.
*ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் வளர்க்கப்படும் ஒரு யோசனையும் தொடங்குகிறது.