News September 22, 2025
காயங்களை ஆற்றும் எச்சில்

உங்களின் வாய் சாப்பிட உதவும் உறுப்பு மட்டுமல்ல, அது நோய்களை குணப்படுத்தும் சிறந்த அமைப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். வாயில் சுரக்கும் எச்சிலில் (உமிழ்நீர்) உள்ள ஹிஸ்டாடின்ஸ் போன்ற புரோட்டீன்கள், காயமடைந்த திசுக்களை விரைவாக குணப்படுத்துவதாகவும், ஆண்டி செப்டிக் மருந்துகளை விட சிறப்பாக செயல்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர். இதனால் தான், வாயில் ஏற்படும் புண்கள் ஆச்சரியமூட்டும் வேகத்தில் குணமடைகிறதாம்.
Similar News
News September 22, 2025
வரலாற்றில் இன்று

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
News September 22, 2025
தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 22, 2025
பள்ளியில் இருந்து ஒன்றாக விளையாடும் கில் – அபிஷேக்

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில்(47), அபிஷேக் சர்மா(74) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் இருந்து கில்லுடன் ஒன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அபிஷேக்கும் குறிப்பிட்டார். இருவருக்கும் யுவராஜ் ஆலோசகராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.