News September 21, 2025
கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (21.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 21, 2025
கோவை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News September 21, 2025
கோவை: நீரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் தடுப்பணை பகுதியில், ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆம்புலன்ஸ் உதவியுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 21, 2025
கோவை மக்களே: வியாபாரம் செய்ய வங்கி கடன்!

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 22.09.2025 முதல் 26.09.2025 வரை சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம் நடைபெறுகிறது. ரூ.15,000 கடன் பெற புதிதாக விண்ணப்பிப்போரும், முன்பு விண்ணப்பித்து கடன் பெறாதவர்களும் ஆதார், வியாபாரிகள் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உடன் கலந்து கொள்ளலாம் என கோவை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.