News April 13, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம் : கடவுள் வாழ்த்து
◾குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
◾விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
Similar News
News August 17, 2025
SPORTS ROUNDUP: 6-வது இடம் பிடித்த குகேஷ்!

◆ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக உடற்தகுதியை எட்டினார் சூர்யகுமார் யாதவ்.
◆சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர்(இத்தாலி)
◆ஆஸி. அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை விளாசிய விராட் கோலியின்(12 சிக்ஸர்கள்) சாதனையை டெவால்ட் பிரேவிஸ்(14 சிக்ஸர்கள்) முறியடித்தார்.
◆அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில் குகேஷ் 18 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்தார்.
News August 17, 2025
கட்சி பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?

இந்திய கம்யூ., கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 75 வயதான முத்தரசன், 3 முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டார். இதனால், இன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News August 17, 2025
ஆவணி ஞாயிற்றுக்கிழமையும்.. சூரிய வழிபாடும்!

ஆவணி ஞாயிற்றுக்கிழமையில், பூஜைக்காக அர்ச்சனை தட்டில் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். சூரியன் உதிக்கும் திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, நீரை அர்ச்சனைத் தட்டின் மீது தெளிக்க வேண்டும். மாலை வரை தண்ணீர், பால், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதமிருக்க வேண்டும்.