News September 21, 2025
இந்தியா பவுலிங்.. பும்ரா, வருண் உள்ளே

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா, வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Head to Head = 14, வெற்றி = 11 இந்தியா, 3 பாகிஸ்தான்.
Similar News
News September 22, 2025
கடனில் தத்தளிக்கும் அமெரிக்கா

உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், அதுதான் உண்மை. பணக்கார தேசமாக இருந்தாலும், அந்நாட்டு அரசின் கடன் விண்ணைத் தாண்டி உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் கடனுக்கான வட்டியாக சுமார் ₹107 லட்சம் கோடி கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டு பட்ஜெட்டில் 15–18% ஆகும். அந்நாட்டின் மொத்த கடன் ₹3,294 லட்சம் கோடியாம். டாலர் ஆதிக்கம் குறைந்தால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
News September 22, 2025
நாய், பூனை சண்டையால் பிரியும் தம்பதி

போபால் குடும்ப கோர்ட்டில் விநோதமான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. கணவர் வளர்க்கும் நாயும், மனைவி வளர்க்கும் பூனையும் எப்போதுமே சண்டையிட்டு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால், தங்களுக்குள் விவகாரத்து பெறுவதே தீர்வு என அந்த தம்பதி கோர்ட்க்கு சென்றுள்ளது. 2024-ல் திருமணம் செய்த தம்பதி செல்லப் பிராணிகளால் பிரிவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News September 22, 2025
இது ‘முருங்கை’ சமாச்சாரம்!

ஆண்களின் பாலியல் செயல்பாட்டை `முருங்கை’ வலுப்படுத்துவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. முருங்கை விதை, இலைகளில் உள்ள குளூக்கோசினோலேட், பாலி பீனால்கள் மற்றும் சில வகை ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள் ஆணுறுப்பில் ரத்தவோட்டத்தை அதிகரிப்பதால் விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குகிறது, விந்தணுக்கள் சேதத்தை குறைப்பதால் மலட்டுத்தன்மை நீங்குகிறது. மேலும், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் புற்றுநோயையும் இது தடுக்கிறது.