News September 21, 2025

கிளையூரில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு

image

செங்கம் அருகே உள்ள கிளையூர் காளியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பல்வேறு குடும்பப் பிரச்சனைகள், பில்லி சூனியம், திருமணத் தடை, கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ அம்மன் அருள் புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதற்காக திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து புனித நீர் தெளித்து வழிபாடு செய்தனர்.

Similar News

News September 21, 2025

நான் ஒரிஜினல் விவசாயி – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

image

திருவண்ணாமலையில் இன்று (21.09.2025) தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பழனிசாமி, செயலாளர் இரா. சுப்பிரமணி, துணைத் தலைவர் அ.எ. கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அமைச்சர் எ.வ. வேலு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார். இதில், பேசிய அமைச்சர் எ.வ.வேலு தான் ஒரிஜினல் விவசாயி என கூறினார்.

News September 21, 2025

தி.மலை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

திருவண்ணாமலை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய எ.வ.வேலு

image

தி.மலை மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு (செப்.20) அமைச்சர் எ.வ.வேலு பரிசுத்தொகை சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!