News September 21, 2025
சென்னை பெருநகர போக்குவத்து ஆணையக்குழு கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News September 22, 2025
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏசி ட்ரீ

சென்னையின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் 105 அடி உயரத்தில் “ஏசி ட்ரீ” எனப்படும் சூப்பர் ட்ரீ கோபுரம் அமைக்கப்படுகிறது. சிங்கப்பூரின் சூப்பர் ட்ரீ மாதிரியில் உருவாக்கப்படும் இந்த கோபுரம் 10 தளங்களுடன்,கண்ணாடி சூழலமைப்பில் உள்ளக மற்றும் வெளிப்புற பார்வை மேடைகளைக் கொண்டுள்ளது. சுமார் 100 பேர் ஒரே நேரத்தில் நகரத்தைப் பார்வையிட வசதி உள்ளது.
News September 22, 2025
சென்னையில் நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா

நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப்.21) நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, எஸ்.எம்.நாசர் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
News September 21, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.