News September 21, 2025
வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.
Similar News
News September 21, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. SHARE IT.
News September 21, 2025
துரோகத்தின் கூடாரம் அதிமுக: CM ஸ்டாலின்

இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் என்றால் முதலில் வந்து நிற்பது திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டம் வந்த போது அதிமுக இரட்டை வேடம் போட்டது என்றும், அதனால் தான் அன்வர் ராஜா போன்றவர்கள் துரோகத்தின் கூடாரமான அதிமுகவை புறக்கணித்து திமுகவில் இணைந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், CIA-விற்கு எதிராக போராடியவர்கள் மீது அதிமுக அரசு தடியடி நடத்தியது என்று CM ஸ்டாலின் சாடினார்.
News September 21, 2025
சீனாவால் உயரும் தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்க சீனாவும் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவுடன் வர்த்தக போர், சர்வதேச பணவீக்கம், முதலீட்டு மார்க்கெட்களில் சரிவு போன்ற காரணங்களால், சீன ரிசர்வ் வங்கியும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனவாம். உலக பொருளாதார நிலை சரிந்தாலும், சீனா தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்கிறதாம். சந்தையில் தேவை இருப்பதாலேயே, தங்க விலையும் சரியாமல் உள்ளது.