News September 21, 2025
18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
சீனாவால் உயரும் தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்க சீனாவும் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவுடன் வர்த்தக போர், சர்வதேச பணவீக்கம், முதலீட்டு மார்க்கெட்களில் சரிவு போன்ற காரணங்களால், சீன ரிசர்வ் வங்கியும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனவாம். உலக பொருளாதார நிலை சரிந்தாலும், சீனா தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்கிறதாம். சந்தையில் தேவை இருப்பதாலேயே, தங்க விலையும் சரியாமல் உள்ளது.
News September 21, 2025
தீபாவளிக்கு இரட்டை போனஸ்.. அரசு HAPPY NEWS

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA(அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்.15-ம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி DA வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படுமாம். மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி செலவுக்கு பிரச்னை இருக்காது.
News September 21, 2025
3 கேட்ச்சுகளை விட்ட இந்தியா.. பும்ராவும் சொதப்பல்

ஆசிய கோப்பையில் பாக்., எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களுக்குள் இந்தியா 3 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. அபிஷேக் சர்மா 2 கேட்ச், குல்தீப் யாதவ் 1 கேட்ச் தவறவிட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட பர்ஹான் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். மேலும், பும்ரா பவர்பிளே ஸ்பெல்லில் 9 வருடங்களுக்கு பிறகு 30 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளார். தற்சமயம், சயிம் அயூபின் கேட்ச்சை அபிஷேக் சர்மா பாய்ந்து பிடித்துள்ளார்.