News September 21, 2025
கோவை MLA-க்களுக்கு திமுக நெருக்கடி தருகிறது: பாஜக

கோவை MLA-க்களுக்கு திமுக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத காரணத்தால் திமுக அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நெருக்கடி கொடுப்பதாக கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும், மீண்டும் கோவையில் 10/10 என்று தொகுதிகளை கைப்பற்ற போவது NDA கூட்டணி தான் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
3 கேட்ச்சுகளை விட்ட இந்தியா.. பும்ராவும் சொதப்பல்

ஆசிய கோப்பையில் பாக்., எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களுக்குள் இந்தியா 3 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. அபிஷேக் சர்மா 2 கேட்ச், குல்தீப் யாதவ் 1 கேட்ச் தவறவிட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட பர்ஹான் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். மேலும், பும்ரா பவர்பிளே ஸ்பெல்லில் 9 வருடங்களுக்கு பிறகு 30 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளார். தற்சமயம், சயிம் அயூபின் கேட்ச்சை அபிஷேக் சர்மா பாய்ந்து பிடித்துள்ளார்.
News September 21, 2025
குழந்தைகளுக்கு டீ கொடுக்கலாமா? எச்சரிக்கை!

டீ குடிக்க வேண்டும் என குழந்தைகள் அடம்பிடிப்பதால் பெற்றோர்களும் அதை அவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர். ஆனால், டீயில் இருக்கும் கஃபைன் குழந்தைகளின் மூளையை நீண்ட நேரத்துக்கு சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் அவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறதாம். இது தொடர்ந்தால், நரம்பியல் பிரச்னை, ஊட்டச்சத்து குறைபாடு என பல பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.
News September 21, 2025
மீண்டும் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாக்., கேப்டனுடன் கை குலுக்க மறுத்தார். லீக் சுற்று மோதலில் நடந்த நிகழ்வே மீண்டும் அரங்கேறியது. அதே நேரத்தில், டாஸின் போது பாக்., கேப்டன் சூர்யகுமார் யாதவை கண்டும் காணாதது போல் இருந்தார். கடந்த முறை இது தொடர்பாக பாக்., புகாரளித்த நிலையில், கை குலுக்குவது அவசியமில்லை என ஐசிசி பதிலளித்திருந்தது.