News September 21, 2025
தலைநகரில் கூடும் தமிழக எம்.பி.க்கள்.. காரணம் என்ன?

திமுக மக்களவை – மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் செப்.23ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்கும் என்பதால், அதுகுறித்து ஆலோசிக்க CM ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் எம்.பி.க்கள் கூடுகின்றனர். இதில், தமிழகத்துக்கான நிதி, ஜி.எஸ்.டி, USA வரி, மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News September 21, 2025
மீண்டும் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாக்., கேப்டனுடன் கை குலுக்க மறுத்தார். லீக் சுற்று மோதலில் நடந்த நிகழ்வே மீண்டும் அரங்கேறியது. அதே நேரத்தில், டாஸின் போது பாக்., கேப்டன் சூர்யகுமார் யாதவை கண்டும் காணாதது போல் இருந்தார். கடந்த முறை இது தொடர்பாக பாக்., புகாரளித்த நிலையில், கை குலுக்குவது அவசியமில்லை என ஐசிசி பதிலளித்திருந்தது.
News September 21, 2025
காலம் மறந்தவை: பொம்மை பிஸ்கட் ஞாபகம் இருக்கா?

80s, 90s கிட்ஸ்களே, குருவி, மயில், குரங்கு, மீன் என வகை வகையான விலங்குகளின் வடிவங்களில் நாம் வாங்கி தின்ற இந்த பொம்மை பிஸ்கெட்டுகள் ஞாபகம் இருக்கிறதா? ஒவ்வொரு விலங்குகளையும் எடுத்து அதன் ஒவ்வொரு பாகமாக திண்போம். ஒரு ரூபாய்க்கு ஒரு கை நிறைய அள்ளி தருவார் பெட்டிக்கடை அண்ணன். டீயில் மீன் பிஸ்கெட்டை போட்டு அதை மிதக்கவிட்டு சாப்பிடுவோம். இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 21, 2025
விஜய் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து: EPS

2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் பேசியதற்கு, ரியாக்ட் செய்துள்ள EPS, அது விஜய்யின் தனிப்பட்ட கருத்து என்றும், மக்களின் கருத்து வேறாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் மீது நேரடி விமர்சனத்தை EPS தவிர்ப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பதாலா? அல்லது எதிர்காலத்தில் கூட்டணி வைக்க உதவும் என்று EPS நினைக்கிறாரா.. உங்க கருத்து?