News September 21, 2025
Paytm-ல் கொண்டுவரப்பட்ட புது வசதி!

கடையில் பொருள் வாங்கிய பிறகு, காசில்லை என்றால் இனி சங்கடப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்கு Paytm, ‘Spend Now, Pay Next Month’ என்ற குறுகிய கால கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இம்மாதம் பரிவர்த்தனைகள் செய்வது விட்டு, அதற்கான தொகையை அடுத்த மாதம் கட்டலாம். ஆனால், இந்த கடனை பெற, நல்ல கிரெடிட் ஸ்கோரும், கரெக்ட்டான Repayment Capacity கட்டாயம் தேவைப்படுகிறது.
Similar News
News September 21, 2025
இன்று இரவு 12 மணிக்கு தொடங்குகிறது: ரெடியா இருங்க

ஜிஎஸ்டி விலை குறைப்பு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. தீபாவளியையொட்டி வீட்டிற்கு தேவையான டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், செல்போன், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய விரும்புவர்கள் 12 மணி வரை தூங்காதீங்க. பெரும்பாலான மக்கள் இரவில் முண்டியடிக்க வாய்ப்பிருப்பதால், உங்களுக்கு பிடித்த பிராண்டுகள் நொடியில் தீர்ந்து போகலாம். அதனால், தயாரா இருங்க மக்களே! SHARE IT.
News September 21, 2025
தனுஷ் இயக்கத்தில் நடிப்பது சிரமம்: சத்யராஜ்

தனுஷின் ‘இட்லி கடை’ படம் பட்டையை கிளப்பும் என சத்யராஜ் கூறியுள்ளார். தனுஷுடன் நடிக்க வேண்டுமென தனக்கு நீண்ட நாள்களாக ஆசை இருந்ததாகவும், அது ‘இட்லி கடை’ படத்தில் அவர் இயக்கத்திலேயே நிறைவேறிவிட்டதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் கூட எளிதில் நடித்துவிட்டேன், ஆனால் தனுஷ் இயக்கத்தில் நடிப்பது சிரமம் என்று அவர் கொங்கு தமிழில் குசும்பாக பேசினார். படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News September 21, 2025
பெட்ரூம் அமைதியா இருக்க.. இந்த 4 பொருள்களை நீக்குங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, படுக்கையறையில், இந்த 4 பொருள்கள் இருக்கக்கூடாது *தெய்வப் படங்கள்: இது எதிர்மறையாக ஆற்றலை பெருக்கும் *விலங்குகளின் படங்கள்: தம்பதியரின் உறவில் மோதல்களை ஏற்படுத்தி, அமைதியை குலைக்கும் *காலணிகள்: தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடியிலும் காலணிகள் இருக்கக்கூடாது. இது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் *துடைப்பம்: இது நிதி நிலையை மோசமாக்கி, துரதிஷ்டத்தை தரக்கூடியது.