News September 21, 2025
சென்னை: பிரபல நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
தென்னிந்திய நடிகர் சங்கம் 69வது பொதுக்குழு கூட்டம்

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் நடிகை சரோஜா தேவிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.
News September 21, 2025
சென்னை பெருநகர போக்குவத்து ஆணையக்குழு கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
News September 21, 2025
தவறவிட்ட பொருட்களுக்கு அலுவலகம் திறப்பு

மெட்ரோ ரயிலில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா தலைமை வகித்தார்.தவறவிட்ட பொருட்கள் தொடர்புக்கு https://chennaimetrorail.org/lost-and-found-enquiry