News September 21, 2025
தவெகவை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்: விஜய்

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகி வரும் அங்கீகாரத்தை கண்டு பலர் அஞ்சி நடுங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் பரப்புரையில் பங்கேற்ற அனைவருக்கும் X பதிவில் நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழக மக்களுக்கான முதன்மை சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.
Similar News
News September 21, 2025
நாடு முழுவதும் விலையை குறைத்தது அமுல்..!

பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 0%, 5% ஆக மாற்றப்பட்டுள்ளதால், அவற்றின் விலையை அமுல் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, ₹83-க்கு விற்கப்பட்டு வந்த அமுல் கோல்டு பால் இனி ₹80-க்கு கிடைக்கும். அரை கிலோ வெண்ணெய் விலை ₹20 குறைந்து ₹285-க்கு விற்கப்படவுள்ளது. மேலும் முறையே 200 கிராம் பிரெஞ்ச் ஃபிரைஸ் பாக்கெட் விலை ₹3, 150 கிராம் டார்க் சாக்லேட் விலை ₹20, அமுல் நெய் டின் ஒரு லிட்டர் ₹40 குறைந்துள்ளது.
News September 21, 2025
விஜய்க்கு அட்வைஸ் செய்த கமல்ஹாசன்

கூடும் கூட்டம் வாக்காக மாறாது என விஜய் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனத்தையே கமல்ஹாசனும் பிரதிபலித்துள்ளார். விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்றும், தைரியமாக முன்னேறிச் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கூடும் கூட்டம் கண்டிப்பாக வாக்காக மாறாது எனக் குறிப்பிட்ட அவர், அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும், எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
News September 21, 2025
‘நியோ மிடில் கிளாஸ்’ எழுச்சி!

25 கோடி பேர் வறுமையை வென்றதாக கூறிய PM மோடி, அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ₹12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.