News September 21, 2025
தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரா டிடிவி?

NDA-வில் இருந்து வெளியேறிய தினகரன், தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில், 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட வரும் தேர்தலில் விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்படி இவர், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது, தவெகவுடனான கூட்டணி அச்சாரமாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?
Similar News
News September 21, 2025
HEALTH TIPS: இந்த உணவுகளை தவிர்க்க வேண்டாம்!

மூளையின் செயல்பாடு, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு அன்றாடம் போதுமான அளவு வைட்டமின் பி12 எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சியில் இந்த சத்து அதிகளவு கிடைக்கிறது. உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் பால், யோகர்ட், சீஸ், மோர், பனீர் ஆகியவற்றை உணவுமுறையில் சேர்ப்பது அவசியம். பால், யோகர்ட் சாப்பிடாதவர்கள் பாதாம், சோயா, ஓட்ஸ், டோஃபு போன்றவற்றை சாப்பிட்டு பி12 சத்து பெறலாம். SHARE IT.
News September 21, 2025
கோவை MLA-க்களுக்கு திமுக நெருக்கடி தருகிறது: பாஜக

கோவை MLA-க்களுக்கு திமுக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத காரணத்தால் திமுக அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நெருக்கடி கொடுப்பதாக கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும், மீண்டும் கோவையில் 10/10 என்று தொகுதிகளை கைப்பற்ற போவது NDA கூட்டணி தான் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
USAக்கு பதிலாக இந்த நாடுகளில் வேலைக்கு போங்க

இந்தியர்களுக்கான H-1B விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது USA. இதனால், வேலைக்காக USA-க்கு போவதற்கு பதிலாக, ➤ஜெர்மனி ➤கனடா ➤ஆஸ்திரேலியா ➤சுவிட்சர்லாந்து ➤UAE ➤சிங்கப்பூரை தேர்வு செய்யலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நாடுகளில் நல்ல வருமானம், வலுவான பொருளாதாரம், சிறந்த சமூக நலத் திட்டங்கள், மற்றும் நிரந்தர குடியுரிமைக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.